Thursday 30 October 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 விரைவில்

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 விரைவில்




துல்லியமான துளியும் பொய் கலப்பு இல்லாத உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்த சனி பெயர்ச்சி பலன்களை ஐம்பது வருடத்திற்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட ஜோதிடர்,  தலைசிறந்த ஜோதிட வார பத்திரிகையான "எதிர் காலம்" இதழில் துணை ஆசிரியராகவும், தினத்தந்தி பத்திரிகையில் ஐயா ஆதித்தனார் அவர்களுடன் பணி புரிந்தவரும், இந்தியாவிலேயே முதல் முறையாக தபால் மூலம் எளிய முறையில் ஜோதிட பயிற்சி அளித்தவரும், பல ஜோதிட ஆராய்ச்சி நூல்களை எழுதியவரும், மேலும் பல புத்தகங்களை எழுதி கொண்டு இருப்பவரும், தனக்கு இறைவன் அளித்த ஜோதிட திறனை வியாபாரமாக கருதாமல் மக்கள் சேவையாக கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக சேவை செய்து வரும்   பிரபல ஜோதிடர் திரு வீரராகவ அய்யங்கார்  இந்த சனி பெயர்ச்சியில் வெற்றி பெற போக வேண்டிய கோவில்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் போன்ற அரிய ஆன்மீக, ஜோதிட தகவல்களை சாணக்யன் குரல் வாசகர்களுக்காக விரைவில் வழங்கவிருக்கிறார்.

Sunday 5 October 2014

ஜோதிடம் - பிறந்த ராசியும் அந்த ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்களும்…

ஜோதிடம்
பிறந்த ராசியும் அந்த ராசியில் பிறந்தவர்களின்  குணாதிசயங்களும்


 ஜோதிட தந்தை வீரராகவ அய்யங்கார்

Thursday 2 October 2014

பலன் தருமா பயிர்க்காப்பீட்டுத் திட்டம்?

பலன் தருமா பயிர்க்காப்பீட்டுத் திட்டம்?


மழையையே பெரிதும் நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டமாக விளங்குவது பயிர்க்காப்பீட்டுத் திட்டம். இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழியும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பேரழிவை போக்கிடும் திட்டமாக தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தின்படி, காப்பீடு செய்யப்படும் தொகைக்கான காப்பீட்டுக் கட்டணம், அதாவது பிரிமியம், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்றாற்போல் இரண்டு விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை இருந்தது. இந்தக் காப்பீட்டுக்கட்டணத்தில், 50 விழுக்காடு தொகையை தமிழ்நாடு அரசே செலுத்தி வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர்.

காப்பாற்ற போனவர்கள் மீது கல்வீச்சு…

காப்பாற்ற போனவர்கள் மீது கல்வீச்சு


காஷ்மீர் சோகம்


காஷ்மீரில் இயற்கை ஏற்படுத்திய மிகப்பெரிய வெள்ளச்சேதம், அதனால் ஏற்பட்ட உயிரழப்புகள், வீடு, வாசல் இழந்து தவிக்கும் மக்கள் என தவியாய் தவிக்கிறது அந்த மாநிலம். தேசிய பேரழிவாக அறிவித்து 1000 கோடி நிதி உடனடியாக அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ரூ 5 கோடி நிதி தமிழக அரசு சார்பாக வழங்கி இருக்கிறார். மேலும் பல மாநிலங்களும், பொது நல அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. சகஜ நிலை இன்னமும் திரும்பவிட்டாலும் ஓரளவு நிலைமை சீரடைந்து இருக்கிறது. இந்த சீரமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் நமது இந்திய ராணுவ வீரர்கள். தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து காஷ்மீரில் வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கிய மக்களை காப்பாற்றி இருக்கிறார்கள். இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சில ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை இழந்திருப்பது பெரிய துயரம்.

உள்ளாட்சி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?

உள்ளாட்சி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன

கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, கடலூர், விருத்தாசலம், அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட 530 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைதேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணபதி ப.ராஜ்குமார் தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் ஆர்.நந்தகுமாரை விட 2 லட்சத்து 91 ஆயிரத்து 343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பதிவான 6 லட்சத்து 453 வாக்குகளில் கணபதி ராஜ்குமாருக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 104 ஓட்டுகளும், ஆர்.நந்தகுமாருக்கு 1 லட்சத்து 28 ஆயிரத்து 761 ஓட்டுகளும் கிடைத்தன. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சி.பத்மநாபன் 31 ஆயிரத்து 965 வாக்குகள் பெற்றார்.

Wednesday 24 September 2014