Sunday 5 October 2014

ஜோதிடம் - பிறந்த ராசியும் அந்த ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்களும்…

ஜோதிடம்
பிறந்த ராசியும் அந்த ராசியில் பிறந்தவர்களின்  குணாதிசயங்களும்


 ஜோதிட தந்தை வீரராகவ அய்யங்கார்



ஜோதிட தந்தை திரு வீரராகவ அய்யங்கார்

ஐம்பது வருடத்திற்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட ஜோதிடர், தலைசிறந்த ஜோதிட வார பத்திரிகையான "எதிர் காலம்" இதழில் துணை ஆசிரியராகவும், தினத்தந்தி பத்திரிகையில் ஐயா ஆதித்தனார் அவர்களுடன் பணி புரிந்தவரும், இந்தியாவிலேயே முதல் முறையாக தபால் மூலம் எளிய முறையில் ஜோதிட பயிற்சி அளித்தவரும், பல ஜோதிட ஆராய்ச்சி நூல்களை எழுதியவரும், மேலும் பல புத்தகங்களை எழுதி கொண்டு இருப்பவரும், தனக்கு இறைவன் அளித்த ஜோதிட திறனை வியாபாரமாக கருதாமல் மக்கள் சேவையாக கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக சேவை செய்து வரும்   பிரபல ஜோதிடர் திரு வீரராகவ அய்யங்கார் ஜோதிட சம்பந்தமான தகவல்கள் மற்றும் ராசி பலன்கள், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி பலன்கள், ராசிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள், வாழ்கையில் வெற்றி பெற போக வேண்டிய கோவில்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் போன்ற அரிய ஆன்மீக, ஜோதிட தகவல்களை நம் சாணக்யன் குரல் வாசகர்களுக்காக ஒவ்வொரு இதழிலும் வழங்குவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ஆசிரியர்


விருச்சிக ராசி

பல பிரபலங்களும், புகழ் வாய்ந்தவர்களும் விருச்சிக ராசிக்காரர்களாக இருப்பதை பார்க்கலாம். இது வெறுமனே அதிர்ஷ்டம் என கூறி விட முடியாது. மற்ற ராசிக்காரர்களை விட விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றியாளர்களாக இருப்பது என்பது உண்மையே. அதற்கு காரணம் அவர்களை அதிர்ஷ்ட தேவதை தேடி வருவது மட்டும் தானா? அல்லது அவர்களின் இயற்கையான குணாதிசயங்களே அவர்களுக்கு வெற்றியைத் தேடி தருகிறதா?

சொல்லபோனால் இவை இரண்டின் கலவையே அதற்கு காரணம். பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலியாகவும், லட்சியவாதிகளாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்களுக்கு வெற்றி தேடி வருவதற்கு இன்னும் பல்வேறு காரணங்களும் உள்ளது. உதாரணத்திற்கு விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே சூழ்ச்சியை கையாளும் திறனை பெற்றிருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் திறமையாக பொய் சொல்வார்கள். மற்றவர்களை தன் வசம் இழுக்கும் காந்த சக்தியை விருச்சிக ராசிக்காரர்கள் கொண்டுள்ளார்கள். நீங்கள் ஏதோ ஒரு நிகழ்வில் ஒருவர் மீது ஈர்க்கப்பட்டு, அது ஏன் என தெரியாமல் விழித்தால், கண்டிப்பாக அந்த நபர் விருச்சிக ராசிக்காரராக தான் இருக்க வேண்டும். தங்கள் வேலையை நிறைவேற்றிக் கொள்ள அடுத்தவர்களை தங்கள் வசம் இழுக்க தங்களின் இந்த காந்த சக்தியை பயன்படுத்திக் கொள்வார்கள். 

விருச்சிக ராசிக்காரர்களோ பெரிய கனவாக காண தயங்கவே மாட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் லட்சியவாதிகளாவே இருப்பார்கள். இந்த லட்சியமே அவர்களை மிகவும் கடினமாக உழைக்க வைத்து, தங்கள் கனவை அடைய வைக்கும்.

பிரதமர்  நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசி உடையவர்கள் எப்போதும் பெருமையுடன் இருப்பார்கள. ஆனால் நாம் பார்ப்பதை தாண்டி அவர்களிடம் இன்னும் பல பண்புகள் உள்ளது. சிம்ம ராசிக்காரர்களிடம் உள்ள அப்படிப்பட்ட அட்டகாசமான சில குணாதிசயங்களைப் பற்றிப் பார்க்கலாமா?

சுய கௌரவம் இல்லாத சிம்ம ராசிக்காரர்களை பார்ப்பது அரிது. சிங்க கூட்டம் என்றாலே கௌரவம் நிறைந்த ஒன்று தானே.

பொருளளவிலும் சரி, உணர்ச்சி ரீதியிலும் சரி, கொடுப்பதில் அவர்களை மிஞ்ச முடியாது. அது பணம், காதல் அல்லது பழி உணர்வாக இருந்தாலும் சரி. ஆட்களாக இருந்தாலும் சரி, பொருட்களாக இருந்தாலும் சரி, சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் அருமையான விருப்பம் இருக்கும். மற்றவர்களை காட்டிலும் அவர்கள் சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள். பொறுப்புணர்ச்சி அதிகமாகவே இருக்கும். பொறுப்பை எடுத்துக் கொள்ள விருப்பப்படுவார்கள். 

முக்கியமாக வலுவான அறிவுரைகளை வழங்குவார்கள். அவர்களின் வார்த்தைகளில் சத்தியம் இருக்கும். பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் காந்த சக்தியுடன் இருப்பதால், எங்கு சென்றாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பை பெற்றிருப்பார்கள். அறைக்குள் அவர்கள் நுழைந்தாலே மற்றவர்களின் பார்வை அவர்களை நோக்கி திரும்பும். மிகவும் வெளிப்படையாக இருக்கும் அவர்கள் அன்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் திடமான குணாதிசயம் அவர்களை நல்ல தலைமை இடத்தில் அமர வைக்கும். ஒரு சின்ன குழுவிற்கு தலைவராக நியமித்தாலும் சரி, அல்லது நிறுவனத்தின் தலைவராக நியமித்தாலும் சரி, தங்களை நேர்மையுடன் பின்பற்றும் கூட்டத்தை பெற்றிருப்பார்கள்.

நீங்கள் சந்திப்பவர்களில் மிகவும் நேர்மை மிக்கவர்களாக இருப்பார்கள் சிம்ம ராசிக்காரர்கள். உங்களுக்கு சிம்ம ராசி நண்பர் இருந்தால், உங்களின் அனைத்து கஷ்டத்திலும் அதற்காக அவர்கள் வாழ்க்கையையே கொடுப்பதை நீங்கள் காணலாம்.

முதல்வர் ஜெயலலிதா சிம்ம ராசியில் பிறந்தவர்.


No comments:

Post a Comment