Thursday 2 October 2014

காப்பாற்ற போனவர்கள் மீது கல்வீச்சு…

காப்பாற்ற போனவர்கள் மீது கல்வீச்சு


காஷ்மீர் சோகம்


காஷ்மீரில் இயற்கை ஏற்படுத்திய மிகப்பெரிய வெள்ளச்சேதம், அதனால் ஏற்பட்ட உயிரழப்புகள், வீடு, வாசல் இழந்து தவிக்கும் மக்கள் என தவியாய் தவிக்கிறது அந்த மாநிலம். தேசிய பேரழிவாக அறிவித்து 1000 கோடி நிதி உடனடியாக அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ரூ 5 கோடி நிதி தமிழக அரசு சார்பாக வழங்கி இருக்கிறார். மேலும் பல மாநிலங்களும், பொது நல அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. சகஜ நிலை இன்னமும் திரும்பவிட்டாலும் ஓரளவு நிலைமை சீரடைந்து இருக்கிறது. இந்த சீரமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் நமது இந்திய ராணுவ வீரர்கள். தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து காஷ்மீரில் வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கிய மக்களை காப்பாற்றி இருக்கிறார்கள். இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சில ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை இழந்திருப்பது பெரிய துயரம்.



காஷ்மீர் மாநில முதல்வர் "இதுவரை இந்த மாநிலம் கண்டிராத பேரழிவு என சொல்லி திக்பிரமை பிடித்தவர் போல ஆகி விட்டார்.


மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில மக்கள் கொதித்து எழ "என்னை திட்டுவதர்க்க்காகவது மக்கள் உயிரோடு இருக்கிறார்களே" என சோக கீதம் பாடினார். அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த அளவுக்கு செயல்பாடற்ற ஒரு மாநில முதல்வரை இந்தியா முதலில் பார்த்தது இப்போது தான்.

இந்நிலையில் இந்திய ராணுவம் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான  இடங்களுக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் தான் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர் மீது கல்வீச்சு என்ற செய்தி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஷ்மீர் மக்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்டபோது நம் மக்கள் பாதிக்க படுகிறார்களே என பதை  பதைத்த பலரும், இந்த நிகழ்வை கண்டு வெறுப்புற்றனர்.

இது குறித்து கருத்து அறிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை சந்தித்தோம். "கல்லால் அடிப்பவர்களை காப்பாற்றுவது தேவையற்றது. அவர்களை அப்படியே வெள்ளத்தில் விட்டு விட வேண்டும்" என தடாலடியாக ஆரம்பித்தார் அர்ஜுன் சம்பத்.


என்ன சார், இப்படி சொல்றீங்க என்று நாம் கேட்க, "இந்த விஷயம் இன்று நேற்று நடப்பதல்ல, காலம் காலமாக நடந்து வருவது.  நம் ராணுவ வீரர்களை கல் வீசி தாக்குவதற்கென்றே ஒரு அமைப்பு காஷ்மீரில் இயங்கி வருகிறது.  இந்த அமைப்பில், அந்த மாநிலத்தில் உள்ள பெருவாரியான இளைஞர்களும், பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்த மதவாத அமைப்பு, இந்த உறுப்பினர்களுக்கு ராணுவத்தினரை எப்படி கல்லால் தாக்குவது என்று பயிற்சி அளித்து, தினக்கூலியாக ரூ. 200 வழங்குகிறார்கள் என அதிர வைத்தார் அர்ஜுன் சம்பத்.

"மோடி ஏமாற்றப்படுகிறார், ஓமர் அப்துல்லா மோடியை ஏமாற்றுகிறார்"

மேலும் அவர், நம் இந்திய அரசு வழங்கிய நிவாரண தொகையை ஜம்மு பகுதிக்கு கொஞ்சமும் கொடுக்காமல், தீவிரவாதிகள் அதிகம் நிறைந்த காஷ்மீரின் வடக்கு பகுதிகளுக்கு மட்டும் திருப்பிவிட்டிருக்கிறார் அந்த மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா, என்றார் அழுத்தமாக.

மத்தியில் பா. ஜ. க அரசு தானே ஆள்கிறது. இதை பிரதமர் மோடி எப்படி அனுமதித்தார் என்று நாம் கேட்டதற்கு "மோடி ஏமாற்றப்படுகிறார், ஓமர் அப்துல்லா மோடியை ஏமாற்றுகிறார்" என ஆவேசமாக பதில் சொன்னார் அர்ஜுன் சம்பத்.

மேலும், காஷ்மீரில் பண்டிட்டுகள் அகதிகளாக வெளியேறி இருக்கின்றனர் என்பது மட்டுமே மீடியாக்களில் பேசப்படுகிறது.  ஆனால் அங்குள்ள இந்துக்கள் அனைவரும் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.  மற்றவர்கள் நம் ராணுவத்தின் மீது கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்.  லண்டனில் படித்த ஓமர் அப்துல்லா மற்றும் அவர் தந்தை, தாத்தாவிற்கும் இது தான் தேவை.  திட்டமிட்டே இந்த வேலையை அவர்கள் நெடுங்காலமாக செய்து வருகின்றனர்.  கண்டிப்பாக இந்த நிலை மாறும்.  காஷ்மீர் மாநிலத்தில் இந்து மக்கள் நிம்மதியாக, சந்தோஷமாக, சகல உரிமைகளுடன், தீவிரவாத அச்சமின்றி வாழும் நாள் விரைவில் வரும், கல்லெறிபவர்கள் துடைத்து எறியப்படுவார்கள் என்றபடியே முடித்தார் அர்ஜுன் சம்பத்.

மற்ற விஷயங்கள் எப்படியோ, நம் தேசத்தைக் காக்கும் ராணுவத்தினர் பாதிக்கப்படவர்களை  மீட்கும் போது அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்துபவர்கள் காணாமல் போக வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மையான இந்தியனின் எதிர்ப்பார்ப்பு. 

No comments:

Post a Comment